Sunday, June 12, 2011

amway-best buisness

AMWAY--- வெற்றிகரமான வியாபாரம்...
regrads to natrajan-----

ஒரு ஜென் கதையோடு துவங்குவோம்.

ஒரு துறவியிடம் வந்து நின்றான் ஒருவன். “குருவே! நான் ஞானம் பெற எனக்கு முதலில் என்ன தகுதி வேண்டும்”

“ஒரு தேனீர் அருந்தி விட்டு பேசலாமா? - என்றார் குரு.

தன் பக்கம் ஒரு காலிக் கோப்பையையும் வந்தவன் பக்கம் ஒரு நீர் நிரம்பிய கோப்பையையும் வைத்து விட்டு தேனீரை ஊற்றத் தொடங்கினார்.

வந்தவன் பதறினான். ”குருஜி! என் கோப்பையில் ஏற்கனவே நீர் நிரம்பியுள்ளது. அதில் எவ்வாறு தேனீர் ஊற்றுவீர்கள்?”

குரு புன்னகையோடு கேட்டார். “உன் கேள்விக்கு பதில் கிடைத்ததா?”

உங்களுக்கு கிடைத்திருக்கும். எஸ். உங்களிடம் எனது வேண்டுகோளும் அதுதான். முன் கூட்டிய தீர்மானத்தோடு இந்த கட்டுரையை படிக்க துவங்க வேண்டாம். ப்ளீஸ் பி ஓபன் மைண்டட்.

எதற்கு இந்த முன்குறிப்பு? இந்த கட்டுரையை நான் எழுத தூண்டுகோளாய் அமைந்த தியாகுவின் இந்த வலைப்பக்கம் இப்படி துவங்குகிறது. ”இந்த தீபாவளி லீவில் இருந்து ஒரு நண்பர் என்னை ஆம்வேயில் சேரும்படி விரட்டி கொண்டு இருக்கிறார்.” (உள் அர்த்தம் - “என்கிட்டயேவா? நானா மாட்டுவேன்?”)

அவர் ஆம்வே வியாபார வாய்ப்பை முன்பே அறிந்தவரா? தெரியாது. ஆனால், “மாட்டுவதில்லை” என்ற முன் கூட்டிய முடிவுடன் தான் அந்த நண்பரிடம் பேச துவங்குகிறார்.

பிறகு இணையத்தில் ஆம்வே குறித்து தேடிப் பார்க்கும் போது அவருக்கு மலைச்சரிவு என்ற கட்டுரை கிடைக்கிறது. ஆனால் அந்த கட்டுரையோ ஒரு அரை வேக்காடு. பைனரி, பிரமிடு, செயின் லிங்க் என்று பேசி விட்டு இந்த மோசடியை ஆரம்பித்து வைத்தது ஆம்வே என்கிறார் எழுதியவர். ஆம்வே ஒரு பிரமிடு ஸ்கீம் என்ற அய்டியாவை எங்கே பிடித்தாரோ!

இது பற்றிய விவாதம் oru குழுமத்தில் நடந்த போது, நிறைய நண்பர்களின் கருத்துக்கள் இப்படியாக இருந்தன…

--------------------------------------------------- -------------------------

“உழைக்காமல் வரும் எந்தப் பணமும் வேண்டாம் என்பது என் தாழ்மையான எண்ணம்”

”என்னையும் ரெண்டு நாளைக்கு ஒருகா ஆம்வேயில சேக்குறதுக்கு ஒரு கூட்டம் அலையுது... ஒரு வருஷமா தப்பிச்சுக்கிட்ட-
இருக்கேன்... மாட்டேன்னு சொன்னா கோவிச்சுக்குறாங்- ”

”ஏமாறீதீர்கள் மக்களே.MLM என்பது போகாத ஊருக்கு காட்டும் வழி”

”எம் எல் எம் என்பது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. சட்டம் ஏன் அனுமதிக்கிறது என கேட்காதீர்கள்.இவர- கள் தமது கிட்டை ஐயாயிரத்துக்கு விற்பதாகவும், கிட்டை வாங்குபவர் டீலர்/சேல்ஸ் ஏஜெண்டு என்றும் சொல்லி அனுமதி வாங்கிவிட்டார்கள- ”

--------------------------------------------------- ------------------------

(உள்ளே டி.வி-யில் வின்னர் படத்தில் கைப்புள்ள சொல்லிக்கொண்டு இருக்கிறார். “உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு பாவமா இருக்கு!”)

அவர்கள் மேல் குற்றம் சொல்ல முடியாது. காந்த படுக்கை, தேக்கு மரம், கோல்டு காயின் என்று கசப்பான அனுபவங்களால் சூடு கண்ட பூனை கதையாக பொது மக்கள் இருக்க, ஆம்வேயும் அதே குட்டையில் ஊறிய மட்டையாக இருக்குமோ என்ற எச்சரிக்கை உணர்வுடன் அதை பார்க்கிறார்கள்.

கொஞ்சமாவது ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்கள் இது குறித்து உலகம் என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்வோமே என்று தேடிப் பார்க்கும் இடம் இணையம்.

ஆச்சர்யகரமாக இணையத்தில் Amway என்ற சொல் தந்து தேடினால், கிடைக்கும் தகவல்களில் 90%க்கு மேல் Amway பற்றி மோசமான அபிப்பிராயம் தருபவையாகத்தான் இருக்கின்றன. Very strange. ஆங்கிலத்தில் It is too good to be true என்று சொல்வார்கள். இத்தனை எதிர்மறை விமர்சனங்களும் உண்மையானால் ஒரு கம்பெனி இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்க வேண்டும்.

ஒரு பொய்யை நூறு தடவை சொன்னாலே அது உண்மையாகிவிடும் என்பார்கள். இணையத்தில் இவர்கள் லட்சம் முறை கூவி கூப்பாடு போட்டும் Amway அசுரத்தனமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. Amway-ன் வளர்ச்சி இந்தியா, சைனா போன்ற நாடுகளில் மட்டும் தான் என்று ஒருவர் சொன்னார். ஆராயாமல் சொல்லும் அறைகுறை தகவல். 2009-ல் Amway-ன் மொத்த விற்பனை 44,000 கோடிகள். இந்தியாவில் 1400 கோடிகள். சைனாவில் 12000 கோடிகள். மீதம் 30,000?

Amway-ன் மேல் ஏன் இத்தனை பேருக்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சி? காரணம் Amway செய்த ஒரு மிகப் பெரிய சமூகப் புரட்சி. ஒரு சாதாரண நடுத்தர மக்கள் கூட்டத்தில் இருந்து 2200-க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்களையும- , பல்லாயிரக்கணக்கா- லட்சாதிபதிகளையும- உருவாக்கித் தந்த அற்புதமான வியாபார முறையை உலகிற்கு அறிமுகப் படுத்தியதுதான்.

நுகர்பொருள் வணிகமும், அதில் கிடைக்கும் கொள்ளை கொள்ளையான லாபமும் பெருமுதலாளிகள் ஒரு சிலரின் கைகளிள் மட்டுமே இருந்த காலகட்டம் அது. தோழரின் மொழியில் சொல்வதென்றால், பணக்காரர்கள் இன்னும் இன்னும் பணக்காரர்கள் ஆகிக் கொண்டே போனார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருந்தார்கள். இந்த நிலையை மாற்ற தம்மால் ஏதாவது செய்ய முடியுமா? ஏழை, நடுத்தர மக்களும் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள, அவர்களும் பெரும் பணக்காரர்களாக மாற அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று இரண்டு நண்பர்கள் யோசித்தார்கள். அந்த யோசனையில் பிறந்ததுதான் Direct Selling & Network Marketting என்ற அற்புதமான வியாபார முறை.

Walmart, Spensers போன்ற அப்போதிருந்த பெரு வணிக நிறுவனங்கள் துவக்கத்தில் இதை பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் Amway-ன் வளர்ச்சி விசுவரூபம் எடுத்த போது தமது கோடி கோடியான லாபம் கொள்ளை போவது கண்டு பதறி Amway-ன் வள்ர்ச்சியை தடுக்க என்ன செய்யலாம் என கையை பிசைந்து கொண்டு யோசித்தன. அப்போது துவங்கியவை தான் இத்தகைய conspiracy theories. ஆம்வே பற்றிய வதந்திகள், எதிர்மறை விமர்சனங்கள்.

Perverted intelligence என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். மிக அறிவாளிகளாக இருப்பார்கள். ஆனால் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த மாட்டார்கள். அப்படி சில எழுத்தாளர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு ஆம்வே பற்றி இணையத்தில் அவதூறு பரப்ப ஆரம்பித்தார்கள். இதில் ஆம்வே வியாபார வாய்ப்பை முயற்சித்து, சரியாக செய்யத் தெரியாமல், எதிர்பார்த்த “வெற்றி” கிடைக்காமல் “தோல்வி” அடைந்த சிலரும், இலவச சுலப விளம்பரத்துக்கு ஆசைப்படும் சிலரும் சேர்ந்து கொள்ள, கொஞ்சம் உண்மைகளும் நிறைய்ய்ய்ய்ய்ய்- பொய்களுமாய் சேர்ந்து இந்த நியாயம் இல்லாத internet war against Amway – கன ஜோராக நடந்தது.

அதில் குறிப்பிடத்தக்க புத்தகம் ஒன்று. The Merchants of Deception. அந்த புத்தகம் எழுதிய Eric பின்னாளில் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டார். அந்த புத்தகத்தில் தான் எழுதிய நிறைய விசயங்கள் உண்மை அல்ல என்று. ஆனால், இன்னும் கூட நிறைய பேர் அந்த புத்தகத்தை மேற்கோள் காட்டுகிறார்கள்.

இணையத்தில் தான் யார் வேண்டுமானாலும், யாரைப் பற்றி வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் எழுதலாம் என்று ஆகி விட்டது. உதாரணம் வேண்டுமா?http://www.glennhauman.com/news/2005/02/22/dou... இது ஒரு ஆங்கில வலைப் பூ. Dough Weed என்ற முன்னாள் Amway Diamond Direct Distributor பற்றி Glenn Hauman என்பவர் எழுதியது. முழுவதும் அபத்தக் களஞ்சியம்.

டக் வீட் முடிந்த வரை போராடிப் பார்த்தார் (அந்த கட்டுரையில் என்னைப் பற்றி எழுதியுள்ளது அனைத்தும் தவறு. அந்த கட்டுரையை நீக்குங்கள் என்று.) நான்கு வருடங்களுக்கு பிறகு போனால் போகிறதென்று க்ளென் செய்தது என்ன தெரியுமா? அந்த கட்டுரை தவறென்று ஒத்துக் கொண்டு, பெனபிட் ஆஃப் டவுட் அடிப்படையில் அந்த கட்டுரையை நீக்குகிறேன் என்று கட்டுரையின் வாக்கியங்களின் மேல் ஒரு கோடு போட்டதுதான். அந்த அபத்தம் இன்னும் வலையில் படிக்க கிடைக்கிறது.

”உண்மை தன் காலணிகளை அணிந்து முடிப்பதற்குள் பொய் ஊரை ஒரு சுற்று சுற்றி விட்டு வந்து விடுமாம்” – சொல்வார்கள்.

தன் மேல் இருக்கும் இத்தனை மோசமான விமர்சனங்களை களைவதற்கோ, அல்லது அவற்றிற்கு விளக்கம் அளிப்பதற்கோ கூட ஆம்வே முனைப்பு காட்டுவதில்லை. சூரியனைப் பார்த்து நாய்கள் குரைத்தாலென்ன என்ற எண்ணம் போலும். அது தன் பாட்டுக்கு தன் வளர்ச்சியில் கவனமாக போய்க்கொண்டே இருக்கிறது.

அதே போல் எத்தனை negative opinions இருந்த போதும் இன்றும் ஆம்வே வியாபார வாய்ப்பில் இணைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தாம் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள் என்பது என் எண்ணம்.

ஆனால், குழந்தைகளிடம் குச்சி அய்ஸ் வாங்கி கொடுத்துவிட்டு அவர்களின் காது கம்மலை திருடிக்கொண்டு ஓடும் திருடர்களைப் போல, இவர்களிடம் கனவையும், நம்பிக்கையையும் விற்று விட்டு, இவர்களின் பணத்தை திருடுகின்றது ஆம்வே என்பார் தியாகு.

--------------------------------------------------- -----------------------

(மிஸ்டர் தியாகுவிடம் கேட்க எனக்கொரு கேள்வி உண்டு. “மக்களே! இந்த ஏமாற்று வலையில் மாட்டாதீர்கள். கனவுகளை சுமந்து திரிந்து பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்” என்று அறிவுரை சொல்லி விட்டீர்கள்.

நடுத்தர மக்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள, பொருளாதார சுதந்திரம், நேர சுதந்திரம் அடைய எந்த முயற்சிகளும் செய்ய வேண்டாம் என்கிறீர்களா? ஒரே மாதிரியான செக்கு மாட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு – வெந்ததை திங்கட்டும். விதி வந்தால் சாகட்டும் - என்கிறீர்களா?

”கப்பல்கள் கரையில் இருக்கும் வரை பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால் அவை அந்த நோக்கத்திற்காக கட்டப்படவில்லை” அல்லவா? மேலும் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்று கனவு காண்பதும், அதற்கு முயற்சி செய்வதும் ஒன்றும் தவறல்லவே!)

--------------------------------------------------- -----------------------

சரி. இவர்களின் பயத்தில் அர்த்தமே இல்லையா? இவர்களின் புரிதல்கள் தவறானவையா?

அதற்கு முதலில் ஆம்வே என்றால் என்ன? அது தரும் வியாபார வாய்ப்பு என்ன? – என்பது பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள - அல்ல அல்ல - புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் சில விசயங்களை தெளிவு படுத்தி விடலாம்.

1. ஆம்வே ஒரு பைனரி ஸ்கீமா? – இல்லை

2. ஆம்வே ஒரு பிரமிடு ஸ்கீமா? – இல்லை

3. ஆம்வே ஒரு செயின் லிங்க்கா? – இல்லை

4. ஆம்வே என்பது ஆள் பிடிக்கும் பிஸினஸ்ஸா? – இல்லை

5. ஆம்வே என்பது சோப்பு விற்கும் பிஸினஸ்ஸா? – இல்லை

அப்புறம்?

அப்புறம்
இன்னும் தெளிவாக தெரிய வேண்டுமானால் சுதந்திரத்தின் சாம்ராஜ்யம்-- என்ற james W. Robinson எழுதிய அம்வேயின் வரலாறு புத்தகத்தை
வாங்கி படிக்கவும் கண்ணதாசன் பதிப்பகத்தின் வெளியீடு. ஆம்வே பிரமிட் திட்டம் அல்ல. பிரமிட் திட்டம் என்பது வேறு. அம்வேயின் மார்க்கெட்டிங் பிளான் வேறு. பிரமிட் திட்டத்தில் பணம் மட்டும் பரிமாற படும். இங்கு பொருள் சார்ந்த வணிகமுறை.
ஆம்வே பற்றி அரை வேக்காடு தனமாக தெரிந்தவர்கள் தான் தவறாக வதந்திகளை பரப்புவார்கள். 2010 இல் ஆம்வே இன் இந்திய trun over 1780 கோடி என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். சிலர் சொல்வது போல் கேட்ட வியாபாரமாக இருந்தால் வருடத்துக்கு ஒரு முறை எப்படி அதிகம் ஆகும்
ஆம்வே பற்றி முதலில் நானும் தவறாக நனைத்து கொண்டு இருந்தேன்.
ரிச் டாட் போவோர் டாட் புத்தகத்தை எழுதிய ராபர்ட் கியோசாகி
ஆம்வே ஒரு நல்ல வணிக முறை என்று கூறுகிறார். ஒரு பதிவில் சரியாய் என்னால் அம்வையை பற்றி விளக்க முடியவில்லை.
மொத்தத்தில் what you about amway is drop of the ocean, what you dont know about amway is the rest of the ocean

No comments:

Post a Comment